சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நெடுஞ்சாலைகளின் தர மதிப்பீடு
प्रविष्टि तिथि:
31 JUL 2024 1:40PM by PIB Chennai
நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோர் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் செயல்பாடு மற்றும் சாலைகளின் தரம் குறித்து , இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1033 வாயிலாக புகார் செய்யலாம் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், சாலையைப் பயன்படுத்துவோர் தங்களது பிரச்சனைகள் மற்றும் புகார்களை, புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரத்துடன் ராஜ்மார்க்யாத்ரா (Rajmargyatra) செயலி வாயிலாகவும் புகார் செய்வதுடன், அதே செயலியில் புகாரின் நிலைமை குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறைகள் அடிப்படையிலேயே, வாகன ஓட்டிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039508
***
MM/AG/KR
(रिलीज़ आईडी: 2039617)
आगंतुक पटल : 101