சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நெடுஞ்சாலைகளில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள்
प्रविष्टि तिथि:
31 JUL 2024 1:41PM by PIB Chennai
நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு பயன்படும் வகையில், உணவு, கழிப்பறை ஆகியவற்றை கொண்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், இந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான கொள்கை 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.
பயணிகளுக்கு தேநீர், காபி, தண்ணீர், உணவுப் பொட்டலங்கள், கழிப்பறை ஆகியவற்றை கொண்ட அடிப்படை வசதிகள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மதுரை பகுதியில் நெடுஞ்சாலைகளில் 31 அடிப்படை வசதிகளை கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 16 இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். சென்னை பகுதியில் உள்ள 34 அமைப்புகளில் 29 இயங்கி வருகிறது என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.
***
(Release ID: 2039510)
PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2039615)
आगंतुक पटल : 97