ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் மருத்துவ முறைகளைப் பிரதான நீரோட்டத்தில் இணைக்கும் நடவடிக்கை

Posted On: 30 JUL 2024 5:49PM by PIB Chennai

தேசிய நலவாழ்வு குழுமத்தின் முக்கிய உத்திகளில் ஒன்றாக ஆயுஷ் மருத்துவம் உள்ளது. தேசிய நலவாழ்வு குழுமம் மக்களுக்கு எளிதான, மலிவான, தரமான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவர்கள் / துணை மருத்துவப் பணியாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தற்போதுள்ள மாவட்ட மருத்துவமனைகள், சமுதாய சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொலைதூர ஆரம்ப சுகாதார நிலையங்கள் சமுதாய சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் செயல்படும் ஆயுஷ் மருத்துவ நிலையங்களில் ஆயுஷ் மருத்துவத்தை மையப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 27,421 ஆயுஷ் மருத்துவர்கள், 4,581 ஆயுஷ் துணை மருத்துவப் பணியாளர்கள் பல்வேறு இணைந்த சுகாதார வசதிகளில் உள்ளனர். (31.12.2023 நிலவரப்படி).

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு என்ற இலக்கை அடையும் வகையில், விரிவான ஆரம்ப சுகாதார கவனிப்பை (CPHC) வழங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்களை ஆரோக்கிய மையங்களாக மாற்றுவதற்கு அரசு ஆதரவு அளித்து வருகிறது. இவற்றில், ஆயுஷ், ஆயுஷ் மருந்தக  வசதிகளும் உள்ளன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப் ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

***

 


(Release ID: 2039579) Visitor Counter : 44