குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் வேலைவாய்ப்பு

Posted On: 29 JUL 2024 5:09PM by PIB Chennai

உத்யம் (Udyam) பதிவு இணையதளம், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்காக, 01.07.2020 அன்று அரசால் தொடங்கப்பட்டது. 22.07.2024 நிலவரப்படி, உத்யம் பதிவு தளத்திலும் உத்யம் அசிஸ்ட் தளத்திலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் மொத்த வேலைவாய்ப்பு 20.51 கோடி ஆகும்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் (MSME-எம்எஸ்எம்இ), இந்த தொழில் துறையின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இதன் மூலம் எம்எஸ்எம்இ துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் (PMEGP), எம்எஸ்எம்இ சாம்பியன்ஸ் திட்டம், குறு- சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE), குறு, சிறு நிறுவனங்கள் தொகுப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் (MSE-CDP) போன்றவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.

எம்எஸ்எம்இ துறையை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. அவற்றில் சில:

*கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் குறு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பிணையமில்லா கடன் வழங்குதல்

*சுயசார்பு இந்தியா நிதி மூலம் ரூ.50,000 கோடி மதிப்பிலான பங்கு உட்செலுத்துதல்.

*அதிக வரம்புகளைக் கொண்ட எம்எஸ்எம்இ-க்களை வகைப்படுத்துவதற்கான புதிய திருத்தப்பட்ட அளவுகோல்கள்.

*குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை எளிதாக வர்த்தகம் செய்வதற்காக 'உத்யம் பதிவு தளம்' மூலம் பதிவு செய்தல்.

*எம்எஸ்எம்இ-க்களின் நிலை உயர்ந்தால் வரி அல்லாத சலுகைகள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

*5 ஆண்டுகளில் ரூ.6,000 கோடி ஒதுக்கீட்டில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

*18 பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களுக்கு முழுமையான பலன்களை வழங்குவதற்காக 17.09.2023 அன்று பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 (Release ID: 2038552)

***


(Release ID: 2039362) Visitor Counter : 32