விவசாயத்துறை அமைச்சகம்

பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதியுதவி

Posted On: 30 JUL 2024 6:29PM by PIB Chennai

பிரதமரின் கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதியுதவித் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.3.24 லட்சம் கோடி மத்திய அரசால் பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், ஆண்டுக்கு 6,000 ரூபாய் வீதம், இதுவரை 17 தவணைகள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் பயனடைந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதாகவும்,  விதை, உரம், மற்றும் வேளாண் சாதனங்களை வாங்குவதற்கு இந்த நிதி உதவிகரமாக இருப்பதாகவும், அமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039203

*** 

MM/KPG/DL



(Release ID: 2039289) Visitor Counter : 15