வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி அரசில் கையெழுத்திடப்பட்ட நான்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டின் நலனுக்கானவை: திரு பியூஷ் கோயல்
Posted On:
30 JUL 2024 5:42PM by PIB Chennai
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) இன்று ஏற்பாடு செய்திருந்த வளர்ச்சியடைந்த பாரத்தை நோக்கிய பயணம்: மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய 2024-25 என்ற மாநாட்டில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார். முந்தைய அரசுகளைப் போல் இல்லாமல் திரு நரேந்திர மோடி அரசு இதுவரை நான்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்றும், தொடர்புடையவர்களிடம் விரிவான ஆலோசனைகளுக்கு பின்னர் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்தது என்றும் கூறினார்.
பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என்ற துணிச்சலான முடிவை இந்தியா மேற்கொண்டது. ஏனென்றால் அந்த பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இருப்பது ஒருபோதும் நல்ல முடிவு அல்ல என்று திரு கோயல் கூறினார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி இரு மடங்காக உயர்ந்துள்ளது என்றும், அந்நியச் செலாவணி கையிருப்பு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின்படி தொழில் நிறுவனங்கள் விரைவாக ஒத்துழைப்பு அளிக்கவும், தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை தங்கள் நலனுக்குப் பயன்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் திரு கோயல் வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் 12 புதிய தொழில் பூங்காக்களை அரசு அமைத்து வருவதாகவும், 5 முதல் 6 பெரிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறிய திரு கோயல், அரசு வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்தி புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க இந்திய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039137
***
IR/AG/DL
(Release ID: 2039267)
Visitor Counter : 32