எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு ஆலையின் புனரமைப்பு

प्रविष्टि तिथि: 30 JUL 2024 3:54PM by PIB Chennai

விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு ஆலையின் மூலோபாய பங்கு விற்பனைக்கு 2016 அக்டோபரில் அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து, மூலோபாய பங்கு விலக்கலுக்கான பரிவர்த்தனையில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரர்களின் இயலாமை காரணமாக, தகுதிவாய்ந்த ஆணையம் முதலீட்டை விற்பதற்கான விருப்ப வெளிப்பாட்டை  ரத்து செய்ய ஒப்புதல் அளித்தது மற்றும் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை 14/10/2022 அன்று தெரிவித்தபடி, பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு ஆலையை மூடுவதற்கான செயல்முறையைத் தொடங்க அறிவுறுத்தியது. இது 31/10/2022 அன்று செயிலுக்கு தெரிவிக்கப்பட்டது.

தற்போது 245 நிரந்தர ஊழியர்கள் வி.ஐ.எஸ்.பி.யில் பணிபுரிந்து வருகின்றனர். தேவைக்கேற்ப செயிலின் சகோதர ஆலைகள் / அலகுகள் வழங்கிய பாதி முடிக்கப்பட்ட எஃகு மூலம், விஐஎஸ்பி 2023-24 ஆம் ஆண்டில் 13000 டன் விற்பனை செய்யக்கூடிய எஃகு உற்பத்தி செய்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு, கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039008

***

SMB/RS/KR/DL


(रिलीज़ आईडी: 2039149) आगंतुक पटल : 84
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP