ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
பிரதமரின் பிரணாம் முன்னெடுப்பு திட்டம் மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது
प्रविष्टि तिथि:
30 JUL 2024 2:24PM by PIB Chennai
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 2023 ஜூன் 28 அன்று "தாய்மண்ணின் மறுசீரமைப்பு, விழிப்புணர்வு உருவாக்கம், ஊட்டச்சத்து மற்றும் மேம்பாட்டுக்கான பிரதமரின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. உரங்களின் நீடித்த மற்றும் சீரான பயன்பாட்டை ஊக்குவித்தல், மாற்று உரங்களை ஏற்றுக்கொள்வது, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் போன்றவற்றின் மூலம் தாய் மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரதமரின் பிரணாம் திட்டத்தின் கீழ் உள்ளன. இத்திட்டத்தின் கீழ், முந்தைய 3 ஆண்டுகளின் சராசரி பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில், ரசாயன உரங்களின் (யூரியா, டிஏபி, என்.பி.கே, எம்.ஓ.பி) பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ஒரு மாநிலம், யூனியன் பிரதேசங்களால் சேமிக்கப்பட்ட உர மானியத்தில் 50% அந்த மாநிலம், யூனியன் பிரதேசத்திற்கு மானியமாக வழங்கப்படும். விவசாயிகள் உட்பட மாநிலத்தில் உள்ள மக்களின் நலனுக்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த மானியத்தைப் பயன்படுத்தலாம்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2038958)
IR/AG/KR
(रिलीज़ आईडी: 2038995)
आगंतुक पटल : 115