தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இபிஎஃப்ஓ-வில் நிறுவனங்களின் பதிவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு

Posted On: 29 JUL 2024 6:55PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃஓ-வில் (EPFO) 2019-20ம் நிதியாண்டு முதல் 2023-24 நிதியாண்டு வரை புதிய நிறுவனங்களின் பதிவு கணிசமான அதிகரித்துள்ளது. அரசின் அண்மைக்கால கொள்கைகள், முன்முயற்சிகளால் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி, வணிக முறைப்படுத்தலையும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் ஊக்குவிக்க எடுக்கப்பட்ட பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகிறது.

 இபிஎஃப்ஒ-வில் பதிவுசெய்யப்பட்ட மொத்த புதிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.

ஆண்டு வாரியாக இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்த நிறுவனங்களின் எண்ணிக்கை விவரம்:

2019-20 : 1,17,063

2020-21: 2,46,104

 

2021-22: 2,69,295

2022-23: 2,57,470

2023-24 : 2,94,256

செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும், சேவை வழங்கலை மேம்படுத்தவும், டிஜிட்டல் மயமாக்கல் மூலம் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தியுள்ளது.

 டிஜிட்டல் முன்முயற்சிகளும் குறைதீர்ப்பு வழிமுறைகளின் விவரங்களும்: காட்டப்பட்டுள்ளன:

* இணையதளம் மூலமாகவும் நேரடி முறையிலும் பல்வேறு தீர்வு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில்  தங்கள் பிரச்சினைகள், புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பதிவு செய்யலாம்

*தொழிலாளர்கள் தங்கள் குறைகளை சிபிஜிஆர்ஏஎம்எஸ் (CPGRAMS), இபிஎஃப்ஐஜிஎம்எஸ் (EPFIGMS), உமாங் செயலி (UMANG APP) போன்றவை மூலம் இணையதள முறையில் பதிவு செய்யலாம்.

*குறைகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றும் பதிவு செய்யலாம். குறைகள் முறையாக ஏற்கப்பட்டுவிதிகளின்படி தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து கள அலுவலகங்களிலும் மக்கள் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

கீழ்க்கண்ட சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:

*இபிஎஃப் முன்பணக் கோரிக்கைகளை தானியங்கு முறையில் தீர்த்தல்

*எந்த மாதத்திலும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை தாக்கல் செய்தல்

*டிஜி-லாக்கர் வசதி

*டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கான முக அடையாளம் காணும் தொழில்நுட்பம்

*இ-பாஸ் புத்தகம்

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் நலன் - வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

 (Release ID: 2038685)

***

 


(Release ID: 2038980) Visitor Counter : 59


Read this release in: English , Hindi , Hindi_MP , Punjabi