சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை கண்காணித்தலும் சரிபார்த்தலும்

Posted On: 29 JUL 2024 7:24PM by PIB Chennai

மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் (i) பள்ளிப்படிப்பு உதவித் தொகை (ii) பத்தாம் வகுப்புக்குப் பிந்தைய உதவித் தொகை (iii) தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைகள் ஆகிய 3 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதவித்தொகை விண்ணப்பங்களை கண்காணிப்பதற்காக, பல்வேறு மேலாண்மை தகவல் அமைப்புகளும் (எம்ஐஎஸ்)  பகுப்பாய்வு அறிக்கைகளும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) உள்ளன. அதேசமயம் இரண்டு நிலை சரிபார்ப்பு அமைப்பும் நடைமுறையில் உள்ளது. முதல் நிலை சரிபார்ப்பு, சம்பந்தப்பட்ட நிறுவன ஒருங்கிணைப்பு அலுவலராலும் (INO) இரண்டாம் நிலை சரிபார்ப்பு அந்தந்த திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராலும் மாவட்ட, மாநில அளவில் செய்யப்படுகிறது. இறுதியாக, என்எஸ்பி மூலமும் விண்ணப்பங்கள் மீண்டும் சரிபார்க்கப்படுகிறது.

மோசடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், ஒரு முறை கடவுச் சொல் (OTP) அடிப்படையிலான பதிவு, விண்ணப்பதாரர்களின் ஆதார் அடிப்படையிலான பயோ-மெட்ரிக் சரிபார்ப்பு, சரிபார்ப்பு அதிகாரிகளின் செயல்பாடுகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மோசடிகளைத் தடுக்கவும், பயனாளிகளின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ளவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

(Release ID: 2038714)

***

 


(Release ID: 2038911) Visitor Counter : 59