இடுகை இடப்பட்ட நாள்:
25 JUL 2024 3:00PM by PIB Chennai
மத்திய சுற்றுலா அமைச்சகம் 'ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் மூலம் மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் நிதி உதவி அளித்து, சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்கிறது.
நாட்டில் நிலையான, சுற்றுலாத் தலங்களை உருவாக்கும் நோக்கத்துடன் அமைச்சகம் இப்போது தனது ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தை ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 (எஸ்டி 2.0) என திருத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 57 இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் வரையறுக்கப்பட்ட பகுதி கிராமப்புறங்களையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். இதன் அடிப்படையில் 2022-23 ஆம் ஆண்டில் அமைச்சகம் உத்தரகண்டில் உள்ள 'குஞ்சியில் கிராமப்புற சுற்றுலா தொகுப்பு அனுபவம்' உட்பட 29 திட்டங்களுக்கு ரூ. 32.20 கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் துணைத் திட்டமான சவால் அடிப்படையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களையும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. துடிப்பான கிராமங்கள் பிரிவின் கீழ் பின்வரும் உத்தராகண்ட், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் 5 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மத்திய சுற்றுலா அமைச்சகம், இந்தியாவில் கிராமப்புற சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான தேசிய உத்தியையும் வரைவுத் திட்டத்தையும் 8 டிசம்பர் 2021 அன்று வெளியிட்டது. கிராமப்புற தங்குமிடங்களை மேம்படுத்துவதற்கான தேசிய உத்தசார் திட்டம் 5 மே 2022 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலா, பயண மேலாண்மை நிறுவனம், மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இது நாட்டில் கிராமப்புற சுற்றுலாவையும் கிராமப்புற தங்குமிடங்களையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் ஒருங்கிணைப்பு நிறுவனமாகும்.
இந்தியாவில் கிராமப்புற சுற்றுலாவின் திறனை வெளிப்படுத்த கிராமப்புற சுற்றுலா தொடர்பான தளமான www.rural.tourism.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் இந்தியாவில் உள்ள கிராமப்புற சுற்றுலா தலங்கள், கிராமப்புற தங்கும் இடங்கள் போன்ற தகவல்கள் உள்ளன.
அனைத்து அம்சங்களிலும் நிலைத்தன்மை கொண்ட ஒரு சுற்றுலா கிராமத்தை கௌரவிப்பதற்காக சுற்றுலா அமைச்சகம் சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியைத் தொடங்கியது. சுற்றுலா அமைச்சகம் சிறந்த கிராமப்புற தங்குமிட போட்டியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றுலாத்துறை செயலர் தலைமையில் மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், சுற்றுலாத் தொழில்துறையினர் ஆகியோரை உள்ளடக்கிய ஊரக சுற்றுலா மேம்பாட்டுப் பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
---
PLM/KR/DL