தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இ ஷ்ரம் இணையதளம்
Posted On:
25 JUL 2024 4:01PM by PIB Chennai
அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளத்தை (NDUW) உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 26.08.2021 அன்று இ-ஷ்ரம் (eShram) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இஷ்ரம் இணையதளம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனித்துவமான கணக்கு எண்ணை (UAN) வழங்கி அவர்களைப் பதிவு செய்து ஆதரிப்பதாகும்.
31.03.2024 நிலவரப்படி, 29.51 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் சுய அறிவிப்பு அடிப்படையில் இ ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
31 மார்ச் 2024 நிலவரப்படி, இஷ்ரம் போர்ட்டலில் பதிவுசெய்த அமைப்புசாரா தொழிலாளர்களின் பாலின வாரியான எண்ணிக்கை:
பெண்கள் - 15,67,85,963
ஆண்கள் - 13,83,96,531
மற்றவர்கள் - 6,461
31 மார்ச் 2024 நிலவரப்படி, இஷ்ரம் தளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 85,72,306 பேர் பதிவு செய்துள்ளனர்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
------
PLM/KR/DL
(Release ID: 2038781)
Visitor Counter : 31