ஜல்சக்தி அமைச்சகம்
ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்
प्रविष्टि तिथि:
29 JUL 2024 2:49PM by PIB Chennai
நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஜல்ஜீவன் இயக்கம் 2019 ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஜல்ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட போது நாட்டில் உள்ள கிராமப்புற பகுதிகளில் 3.23 கோடி வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இது மொத்த எண்ணிக்கையில் 17 சதவீதமாகும்.
25.07.2024 நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 11.78 கோடி கூடுதலாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து மொத்தம் 15.01 கோடி கிராமப்புற வீடுகள் இந்த வசதியை பெற்றுள்ளன. மொத்தமுள்ள 19.32 கோடி கிராமப்புற வீடுகளில் இது 77.69 சதவீதமாகும். எஞ்சியுள்ள 4.31 கோடி வீடுகளுக்கு விரைவில் இந்த வசதி செய்து கொடுக்கப்படும்.
அந்தமான் நிகோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டையூ & டாமன், கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப்பிரதேசம், மிஜோரம், புதுச்சேரி, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீதம் அளவுக்கு வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 84.96 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 106.34 லட்சம் வீடுகளுக்கு இந்த வசதி கிடைத்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு வி.சோமண்ணா எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
PKV/RR/KR/DL
(रिलीज़ आईडी: 2038667)
आगंतुक पटल : 59