ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கழிப்பறை வசதிகளுடன் கூடிய வீடுகள்

Posted On: 29 JUL 2024 2:50PM by PIB Chennai

தூய்மை இந்தியா இயக்கம் (ஊரகம்) முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு, நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் 2019, அக்டோபர் 2-ம் தேதிக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. திறந்தவெளி கழிப்பிடமில்லாத பகுதி மற்றும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா பகுதியுடன் கூடிய  முன்மாதிரி கிராமங்கள் என்ற நிலையை நீட்டிக்கச் செய்வதற்கு இந்த இயக்கத்தின் இரண்டாவது கட்டம் 5 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கப்பட்டது.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்துடன் இணைந்து, தூய்மை இந்தியா இயக்க (ஊரகம்) நிதியிலிருந்து தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வீட்டில் கழிப்பறை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அனைத்து நடவடிக்கைகளின் காரணமாகவே, திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 1.43 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் அளித்த தகவலின்படி, இந்த நிதியாண்டில் இதுவரை 5,13,722 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய அளவிலும், மாநில அளவிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்வேறு தகவல், கல்வி மற்றும் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தேசிய அளவில் தொலைக்காட்சி, வானொலி மூலம் இது குறித்த அறிவிப்புகள் செயல்படுகின்றன. தூய்மை இந்தியா இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக பிரபலங்கள் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இத்தகவலை மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு  வி. சோமண்ணா மாநிலங்களவையில் இன்று எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

----

IR/KPG/K/DL


(Release ID: 2038666)