நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி உற்பத்தி

Posted On: 29 JUL 2024 4:14PM by PIB Chennai

நாட்டின் பெரும்பாலான நிலக்கரி தேவை உள்நாட்டு உற்பத்தி  மற்றும் விநியோகம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. 2022-23-ம் ஆண்டில் நிலக்கரி தேவை 1115.04 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், அது 2023-24-ம் ஆண்டில் 1233.86 மில்லியன் டன்னாக அதிகரித்து. அதிகரித்து வரும் நிலக்கரித் தேவைக்கு ஏற்ப, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 2022-23-ம் ஆண்டில் நிலக்கரி உற்பத்தி 893.19 மில்லியன் டன்னாக  இருந்த நிலையில் 2023-24-ம் ஆண்டில், 11.65% அதிகரித்து 997.26 மில்லியன் டன்னாக அதிகரித்தது.

உள்நாட்டு ஆதாரங்கள் மூலம் நிலக்கரியின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்வதற்கும், அத்தியாவசியமற்ற நிலக்கரி இறக்குமதியைக் குறைப்பதற்கும், உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் 6 முதல்  7% வரை அதிகரித்து 2029-30-ம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டங்களை அமைப்பதை ஊக்குவிப்பதற்காக ரூ.8,500 கோடி நிதி ஆதரவு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரிவு 1-ன் கீழ், ரூ.4050 கோடி உதவி அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கானது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1350 கோடி அல்லது திட்ட செலவில் 15% மானியம் கிடைக்கும்.

பிரிவு 2-ன் கீழ், ரூ.3850 கோடியில், தனியார் துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1000 கோடி அல்லது திட்ட செலவில் 15% நிதியுதவி கிடைக்கிறது.

பிரிவு 3-ன் கீழ், செயல்விளக்கம் அல்லது சிறிய அளவிலான திட்டங்களுக்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டத்திற்கு அதிகபட்ச நிதியுதவி ரூ.100 கோடி அல்லது திட்ட செலவில் 15% நிதி அளிக்கப்படுகிறது.

இத்தகவலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

---

IR/KPG/KR/DL


(Release ID: 2038640) Visitor Counter : 45


Read this release in: English , Urdu , Hindi , Telugu