நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மலிவு விலையில் தக்காளி விற்பனையை தொடங்கிவைத்தார் மத்திய அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி

Posted On: 29 JUL 2024 2:44PM by PIB Chennai

தலைநகர் தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக, தேசிய கூட்டுறவு நுகர்வோர் விற்பனை இணையம் வாயிலாக வேன் மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி இன்று  (29.07.2024) தொடங்கிவைத்தார். தில்லி, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ ரூ.60 விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. நாடாளுமன்ற வீதி, மத்திய அரசு அலுவலக வளாகம், லோதி காலனி, ஐடிஓ, ஐஎன்ஏ மார்கெட், மண்டி ஹவுஸ், துவாரகா, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட 18 சில்லரை விற்பனை மையங்களில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரலாத் ஜோஷி, இன்று தக்காளி  மூன்று இடங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார். இதன் மூலம் இடைத்தரகர்கள் லாபமடைவது தடைக்கப்பட்டு, நுகர்வோருக்கு பொருட்கள் கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் நாட்களில் சில்லரை விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038421  

***

MM/AG/KR


(Release ID: 2038486) Visitor Counter : 112