வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பிரதமரின் இ- பேருந்து சேவை திட்டத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதியுதவி

Posted On: 29 JUL 2024 1:12PM by PIB Chennai

நகர்ப்புற திட்டமிடல் என்பது மாநிலம் சார்ந்தது என்பதால், பலவகையான பொதுப் போக்குவரத்து உட்பட  நகர்ப்புற போக்குவரத்து அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவது, திட்டமிடுவது, முன்முயற்சி மேற்கொள்வது ஆகியவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

தூய்மையான எரிபொருளைப் பயன்படுத்தி நீடிக்கவல்ல, லாபகரமான நகர்ப்புற போக்குவரத்து முறையைத் திட்டமிடுவதற்கும், அமல்படுத்துவதற்கும் மாநில அரசுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, மின்சார வாகனங்களை அதிகப்படுத்த மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. இதுதவிர, 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட பிரதமரின் இ- பேருந்து சேவை என்ற மத்திய அரசின் ஆதரவிலான திட்டத்தின்படி, மின்சாரத்தில் இயங்கும் 10 ஆயிரம் பேருந்துகளை நகரப்போக்குவரத்தில் ஈடுபடுத்த ரூ.20 ஆயிரம் கோடி மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்படுகிறது.

தூய்மையான எரிசக்தி பயன்பாட்டுக்காக மின்சார வாகனங்களை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு தோக்கன் சாஹூ தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038339

***********

SMB/RS/KR



(Release ID: 2038461) Visitor Counter : 46