அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

லண்டனில் உள்ள வேதியியல் ராயல் சங்கத்தில் ஆய்வாளராக டாக்டர் எஸ் ஸ்ரீதர் இணைந்துள்ளார்

Posted On: 29 JUL 2024 1:02PM by PIB Chennai

ஐதராபாதில் உள்ள  அறிவியல், தொழில் துறை ஆய்வு கவுன்சில் சிஎஸ்ஐஆரின் இந்திய தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானியும், ரசாயன பொறியாளருமான டாக்டர் சுந்தர்கோபால் ஸ்ரீதர் லண்டனில் உள்ள வேதியியல் ராயல் சங்கத்தில் ஆய்வாளராக இணைந்துள்ளார்.

26 ஆண்டுகால அறிவியல் ஆய்வு அனுபவம் கொண்ட டாக்டர் ஸ்ரீதர், ரசாயனம் மற்றும் அது சார்ந்த தொழில் துறைகளுக்கான பல தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளார். சமூக நலனுக்கும் தீவிர பங்களிப்பு செய்துள்ளார்.

நாட்டின் 10 மாநிலங்களில் ஃபுளோரோசிஸ், டைஃபாயிடு உள்ளிட்ட தண்ணீர் சார்ந்த நோய்கள் பாதிக்காத வகையில், 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் நிலத்தடி நீர், நிலத்திற்குமேல் தேங்கியிருக்கும் நீர், வெள்ள நீர் ஆகியவற்றை ஒருமணி நேரத்தில் 600 முதல் 4 ஆயிரம் லிட்டர் வரை சுத்திகரிக்கும் 75 சுத்திகரிப்பு நிலையங்களை டாக்டர் ஸ்ரீதர் வடிவமைத்து நிறுவியுள்ளார். அரசு, தனியார் மருத்துவமனைகளில் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்வதற்கு புதுமையான, செலவு குறைந்த மருத்துவ ரீதியிலான தண்ணீர் தயாரிப்பு  இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானதாகும்.   

கொவிட்-19 நோய் பாதிப்பை மட்டுப்படுத்த குறைந்த செலவில், பல அடுக்கிலான, சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையிலான  முகக்கவசங்களை வடிவமைத்து பள்ளிக் குழந்தைகள், முன் கள பணியாளர்கள் உட்பட 6 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்ஐஆர் இளம் விஞ்ஞானி விருது 2007, ஸ்கோப்பஸ் இளம் விஞ்ஞானி விருது 2011, ரூர்க்கி ஐஐடியின் விஎன்எம்எம் விருது 2015, கரக்பூர் ஐஐடியின் நீனா சக்சேனா தொழில்நுட்ப விருது 2017 உட்பட 70-க்கும் அதிகமான பெருமைமிகு அறிவியல் விருதுகளை டாக்டர் ஸ்ரீதர் பெற்றுள்ளார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038322  

***

SMB/RS/KR



(Release ID: 2038428) Visitor Counter : 43