சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த புதுமையான வழிமுறைகள்
Posted On:
29 JUL 2024 12:14PM by PIB Chennai
போக்குவரத்து சந்திப்புகளில் மாசுபாட்டைத் தணிக்க நீரி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட காற்று சுத்திகரிப்பு அலகுகள், கட்டுமான தளங்களுக்கான தூசி அடக்கி மற்றும் மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சாலை தூசி கட்டுப்பாடு, மானவ் ரச்னா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் & ஸ்டடீஸ் உருவாக்கிய பேருந்து கூரை மேல் வடிகட்டி அமைப்புகள் உருவாக்குதல், ஐஐடி பம்பாய் மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் உருவாக்கிய நடுத்தர அளவிலான காற்று சுத்திகரிப்பு அலகு போன்ற காற்று மாசு தணிப்புக்கான பல்வேறு புதிய தொழில்நுட்பங்களின் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
புனேயின் எஸ் & டிபி-யில் இந்த அனைத்து தொழில்நுட்பங்களிலும், தூசி அடக்கியின் முடிவுகள் ஊக்கமளிப்பதாகக் கண்டறியப்பட்டன. அதற்கேற்ப தில்லி தலைநகர் மண்டலத்தில் அதன் பயன்பாட்டிற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2009-ம் ஆண்டில் தேசிய சுற்றுப்புற காற்று தரங்களை அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட அனைத்து மாசுபடுத்திகளுக்கான அளவீட்டு முறை தேசிய சுற்றுப்புற காற்று தர நிலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட முறையின்படி நாட்டில் சுற்றுப்புற காற்றின் தர கண்காணிப்பு நடத்தப்படுகிறது.
மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் சுற்றுப்புற காற்றின் தரத்தை கண்காணிக்கிறது. தில்லியில் 6, லக்னோவில் 3, பெங்களூருவில் 3, சென்னையில் 3 என மொத்தம் 15 தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பிற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038298
***
PKV/RR/KR
(Release ID: 2038310)