பிரதமர் அலுவலகம்
இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் திரு டேவிட் லாமி பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான இங்கிலாந்தின் விருப்பத்தை திரு டேவிட் லாமி வெளிப்படுத்தினார்
இந்தியா-இங்கிலாந்து விரிவான உத்திசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இங்கிலாந்து பிரதமர் திரு ஸ்டார்மர் அளிக்கும் முன்னுரிமையை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க விரும்புவதற்கு பிரதமர் வரவேற்புத் தெரிவித்தார்
இந்தியா வருமாறு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்
Posted On:
24 JUL 2024 8:00PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடியை இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் திரு டேவிட் லாமி சந்தித்துப் பேசினார். திரு லாமியின் நியமனத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், இங்கிலாந்தில் புதிய அரசு அமைந்த முதல் மாதத்திற்குள் இந்தியாவுக்கு வருகை தந்த திரு லாமியைப் பாராட்டினார்.
இங்கிலாந்து பிரதமர் திரு கெய்ர் ஸ்டார்மருடன் அண்மையில் தாம் நடத்திய உரையாடியதை நினைவுகூர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இருதரப்பு விரிவான உத்திசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும் இங்கிலாந்தின் புதிய அரசு அளிக்கும் முன்னுரிமைக்குப் பாராட்டுத் தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த, இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
பொருளாதாரம், முதலீடு, பாதுகாப்பு, பாதுகாப்பு, முக்கியமான, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றில் இருதரப்பு உறவின் முழு திறனையும் செயல்படுத்த இங்கிலாந்து கொண்டுள்ள ஆர்வத்தையும் விருப்பத்தையும் திரு டேவிட் லாமி வெளிப்படுத்தினார்.
புதிய, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் தொழில்நுட்ப பாதுகாப்பு முன்முயற்சியைத் தொடங்குவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட புரிதலை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். பரஸ்பரம் பயனளிக்கும் இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதை நோக்கி பணியாற்றுவதற்கான இருதரப்பின் விருப்பத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.
பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய, உலகளாவிய விஷயங்கள் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இங்கிலாந்து பிரதமர் திரு கெய்ர் ஸ்டார்மருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அவரது வசதிக்கேற்ப விரைவில் இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
*****
PLM/DL
(Release ID: 2038122)
Visitor Counter : 40