பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய அரசின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்ட / சார்நிலை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகளில் மின்-அலுவலக நடைமுறை செயல்படுத்தப்படுகிறது
Posted On:
28 JUL 2024 12:04PM by PIB Chennai
2019-2024-ம் ஆண்டுக் காலகட்டத்தில், மத்திய செயலகத்தில் 37 லட்சம் கோப்புகளுடன் மின்-அலுவலகத்தை நடைமுறைப்படுத்துவது வேகம் பெற்றுள்ளது. அதாவது, 94 சதவீதத்திற்கும் அதிகமான கோப்புகள், ரசீதுகள், மின்-கோப்புகள், மின்-ரசீதுகளாக மின்னணு முறையில் கையாளப்படுகின்றன. இந்த முயற்சியை மேலும் ஆழப்படுத்த அரசு இ-அலுவலக பகுப்பாய்வுகளை உருவாக்கியது.
மத்திய தலைமைச் செயலகத்தில் மின்னணு அலுவலக தளம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதன் பின்னணியில், நிர்வாக சீர்திருத்தங்கள் துறையின் 100 நாள் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசின் அனைத்து இணைக்கப்பட்ட, சார்நிலை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகளில் இ-அலுவலகம் எனப்படும் மின் அலுவலக நடைமுறையை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைகளுக்குப் பிறகு 113 இணைக்கப்பட்ட, சார்நிலை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் இதை செயல்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டன.
இவற்றில் இ-அலுவலகம் எனப்படும் மின் அலுவலக நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை நிர்வாக சீர்திருத்தங்கள் துறை, 24 ஜூன் 2024 அன்று வெளியிட்டது. அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டங்களில் தொழில்நுட்ப வழிமுறைகள் உறுதிப்படுத்தப்பட்டன.
26 ஜூலை 2024 அன்று நிர்வாக சீர்திருத்தங்கள் துறைச் செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ் தலைமையில் நடைபெற்ற 2-வது அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனை, ஆய்வுக் கூட்டத்தில் தேசிய தகவல் மைய அதிகாரிகள், அனைத்து அமைச்சகங்கள், துறைகளின் பிரதிநிதிகள், இணைக்கப்பட்ட, சார்நிலை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காணொலி மூலம் 290-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 55 இணைக்கப்பட்ட, சார்நிலை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் மின் அலுவலகத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளைத் தொடங்கியுள்ளன.
****
PLM/DL
(Release ID: 2038099)
Visitor Counter : 80