சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தொற்று நோய்களின் புதிய திரிபுகள் பற்றிய ஆராய்ச்சி புதுப்பிப்பு
Posted On:
26 JUL 2024 6:03PM by PIB Chennai
பிரதமர் தலைமையிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆலோசனைக் குழு நாடு முழுவதும் தொற்றுநோய்க்கான தயார் நிலை குறித்த தற்போதைய நிலைமையை ஆய்வு செய்தது.
இதில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய "தேசிய ஒரு சுகாதார இயக்கம் (என்ஒஎச்எம்))" மூலம் தொற்றுநோய்க்கான தயார் நிலையில் ஒருங்கிணைந்த முயற்சியின் அவசியத்தை அங்கீகரித்தது. மேலும் பல துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது. முக்கிய பங்குதாரர்களுடன் இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தால் வழிநடத்தப்படும் தேசிய சுகாதார இயக்கத்தோடு 13 அமைச்சகங்கள், துறைகள் தங்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைத்துள்ளன.
அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பத்தை கொண்டு ஒருங்கிணைந்த கண்காணிப்பை செயல்படுத்தவும் உயிரியல் பாதுகாப்பு நிலை 3 (BSL-3) ஆய்வகங்களின் தேசிய வலையமைப்பு (அதிக ஆபத்துள்ள அல்லது அறியப்படாத நோய்க்கிருமிகளைச் சோதிப்பதற்காக) ஏற்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.
மனிதர்கள், விலங்குகள், வனவிலங்குகள், கால்நடைகள் ஆரோக்கியத்திற்கான தடுப்பூசிகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் உள்ளிட்ட மருத்துவ நடவடிக்கைகளுக்கான கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
*****
VK/DL
(Release ID: 2038072)
Visitor Counter : 39