பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தாயின் பெயரில் ஒரு மரக் கன்று நடும் இயக்கம் - சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக் கன்றுகளை நடுகிறது பாதுகாப்பு அமைச்சகம்

प्रविष्टि तिथि: 28 JUL 2024 9:31AM by PIB Chennai

2024 ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சகம் நாடு முழுவதும் 15 லட்சம் மரக்கன்று நடும் இயக்கத்தை மேற்கொள்கிறது. மரக்கன்றுகள் நடும் இயக்கம் 'ஏக் பெட் மா கே நாம்' (தாயின் பெயரில் ஒரு மரம்) இயக்கத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ளது. முப்படைகள், டிஆர்டிஓ, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், சைனிக் பள்ளிகள், தளவாட தொழிற்சாலைகள் போன்ற பாதுகாப்புத் துறை அமைப்புகள் மூலம் இந்த இயக்கம் நடத்தப்படும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தாயின் பெயரில் மரக் கன்று நடும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கும் இந்த இயக்கத்தில் பங்கேற்று தமது தாயின் நினைவாக மரக்கன்றை நட்டுள்ளார். இயற்கையைப் பாதுகாக்கும் இயக்கத்தில் மக்கள் இணைய வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை மேலும் சிறப்பாகவும், ஆற்றல்மிக்கதாகவும் மாற்றுவதில் தீவிரமாக பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

****

PLM/DL


(रिलीज़ आईडी: 2038062) आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Hindi_MP , Bengali