தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

விவசாய, கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் வெளியீடு

Posted On: 26 JUL 2024 7:35PM by PIB Chennai

விவசாயத் தொழிலாளர்கள் (CPI-AL சிபிஐ ஏஎல்), கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (அடிப்படை: 1986-87=100) ஜூன் 2024-ல் தலா 11 புள்ளிகள் அதிகரித்து, முறையே 1280,  1292 ஆகிய நிலைகளை எட்டியது.

இந்த மாதத்திற்கான சிபிஐ -ஏஎல், சிபிஐ -ஆர்எல் அடிப்படையிலான  ஆண்டு பணவீக்க விகிதங்கள் 7.02%,  7.04% ஆக பதிவாகியுள்ளன. இது 2023 ஜூனில் 6.31%, 6.16% ஆக இருந்தது. மே 2024-க்கான தொடர்புடைய புள்ளிவிவரங்கள் சிபிஐ -ஏஎல் 7.00% சிபிஐ -ஆர் எல் 7.02% ஆகும்.

****

PLM/DL



(Release ID: 2037977) Visitor Counter : 7


Read this release in: English , Urdu , Hindi , Marathi