மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மின்னணு பாகங்கள், குறைக்கடத்திகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.8,803.14 கோடி கூடுதல் முதலீடு செய்யப்பட்டு ரூ. 18,083.55 கோடி மதிப்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது
Posted On:
26 JUL 2024 5:33PM by PIB Chennai
மின்னணு பாகங்கள் உற்பத்தி அமைப்பின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் திட்டங்கள் பின்வருமாறு:
மின்னணு பாகங்கள், குறைக்கடத்திகள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்டம் (SPECS எஸ்பிஇசிஎஸ்) 01.04.2020 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் 31.03.2024 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மின்னணு பாகங்கள், மின்னணு கழிவு மறுசுழற்சி, மெக்கானிக்ஸ், மைக்ரோ, நானோ-மின்னணு பொருட்கள், சூரிய போட்டோவோல்டிக் (SPV) பாலிசிலிகான், எஸ்பிவி வேஃபர்கள், சூரிய மின்கலங்கள், சிறப்பு துணை அசெம்பிளிகள் போன்றவற்றை பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலதன செலவுகளில் 25% நிதி ஊக்கத்தொகையை இந்த திட்டம் வழங்குகிறது. 30.06.2024 நிலவரப்படி, எஸ்பிஇசிஎஸ் திட்டத்தின் கீழ் ரூ.8,803.14 கோடி கூடுதல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 30 ஜூன், 2024 வரை ரூ. 18,083.55 கோடி மதிப்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான மின்னணு பொருட்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம்: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், மின்னணு பாகங்கள், குறைக்கடத்தி பேக்கேஜிங் உள்ளிட்ட மொபைல் போன் மதிப்புச் சங்கிலியில் முதலீட்டை ஈர்க்கவும், பெரிய அளவிலான மின்னணு உற்பத்திக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் திட்டம் (பிஎல்ஐ) 01.04.2020 அன்று அறிவிக்கப்பட்டது. மொபைல் போன்கள், குறிப்பிட்ட மின்னணு பாகங்கள் போன்ற பிரிவுகளின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் கூடுதல் விற்பனைக்கு (அடிப்படை ஆண்டை விட) தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 30 ஜூன் 2024 வரை, பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ரூ. 8,390 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது 30 ஜூன் 2024 வரை ரூ. 5,14,960 கோடி மதிப்பில் உற்பத்தி செய்ய வழிவகுத்தது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மின்னணு - தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
PLM/DL
(Release ID: 2037975)
Visitor Counter : 35