பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஜூன் 2024 க்கான செயலக சீர்திருத்தங்கள் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது - மொத்த கோப்புகளில் 94.08% மின்-கோப்புகள், மொத்த ரசீதுகளில் 94.18% மின் ரசீதுகள்

Posted On: 26 JUL 2024 6:07PM by PIB Chennai

பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (DARPG) ஜூன் 2024 க்கான "செயலக அலுவலக சீர்திருத்தங்கள்" குறித்த மாதாந்திர அறிக்கையின் 15-வது பதிப்பை 3 முன்முயற்சிகளின் கீழ் விரிவான பகுப்பாய்வுடன் வெளியிட்டுள்ளது. 
(i) முடிவெடுப்பதில் செயல்திறனை அதிகரித்தல் 
 (ii) மின்-அலுவலகம் 
(iii) தூய்மை இயக்கமும் நிலுவையில் உள்ள நிலுவையில் உள்ள பணிகளை  குறைத்தல். 
ஆகியவை அந்த 3 முன்முயற்சிகளாகும்.

ஜூன் 2024-க்கான அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

முடிவெடுத்தல், மின் அலுவலக செயல்படுத்தல், பகுப்பாய்வு ஆகியவற்றில் செயல்திறனை அதிகரித்தல்:

*ஜூன் 2024-ல், மொத்த கோப்புகளில் 94.08% மின்-கோப்புகள். மொத்த ரசீதுகளில் 94.18% மின்-ரசீதுகள்.

*16 அமைச்சகங்கள், துறைகள் ஜூன் 2024-ல் மின்-ரசீதுகளில் 100% பங்கைக் கொண்டுள்ளன.

தூய்மை இயக்கம், நிலுவைப் பணிகள் குறைப்பு:

*5,242 இடங்களில் தூய்மை முகாம் நடத்தப்பட்டது

* 2.58 லட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது

*பழைய பொருட்கள் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.25.24 கோடி

சிறந்த நடைமுறைகள் -மின் கழிவுகளை அகற்றுதல்:

பல அமைச்சகங்கள், துறைகளில் மின்னணு கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை விடுவிக்கவும், அவற்றை சுத்தமான புதிய அலுவலக இடங்களாக மாற்றவும் இயக்கங்களை நடத்தின. அமைச்சகங்கள், துறைகளின் இத்தகைய முயற்சிகளின் புகைப்படங்கள் மாதாந்திர அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.

*****

PLM/DL



(Release ID: 2037956) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP