வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ள மத்திய அரசு
Posted On:
26 JUL 2024 5:12PM by PIB Chennai
நாட்டில் ஸ்டார்ட்அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் ஆதரவளிக்கவும் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், புதிய கண்டுபிடிப்புகள், புத்தொழில்கள் மற்றும் நாட்டின் புத்தொழில் சுற்றுச்சூழலில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக 2016 ஜனவரி 16 அன்று ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியை மத்திய அரசு தொடங்கியது என்று கூறினார்.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் (டிபிஐஐடி ) ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ் நிறுவனங்கள் புத்தொழில்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2024 ஜூன் 30 நிலவரப்படி 1,40,803 நிறுவனங்களை புத்தொழில்களாக டிபிஐஐடி அங்கீகரித்துள்ளது. மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் வாரியான DPIIT அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
புத்தொழில் இந்தியா செயல் திட்டம், புத்தொழில் இந்தியா: முன்னோக்கி செல்லும் வழி, புத்தொழில் இந்தியா விதை நிதித் திட்டம் (எஸ்ஐஎஸ்எப்எஸ்) , புத்தொழில்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம், ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள், எளிமையான கொள்முதல் கொள்கை, என புத்தொழில்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
*****
VK/DL
(Release ID: 2037917)
Visitor Counter : 40