ரெயில்வே அமைச்சகம்
2024-25-ம் ஆண்டில் இந்திய ரயில்வேயில் புதிய வழித்தடம், வழித்தட மாற்றம், இரட்டை ரயில் பாதைத் திட்டங்களுக்கு ரூ. 68,634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Posted On:
26 JUL 2024 7:16PM by PIB Chennai
ரயில்வே திட்டங்கள் மண்டல ரயில்வே வாரியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. மாநில, பகுதி, மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்படுவது இல்லை. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள், ஒட்டுமொத்த நிதி இருப்பு, திட்டங்களால் கிடைக்கும் பலன்கள், கடைசி மைல் இணைப்பு, சமூக-பொருளாதார பரிசீலனைகள் போன்றவற்றின் அடிப்படையில் ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள், மேற்கொள்ளப்படுகின்றன.
ஒருங்கிணைந்த திட்டமிடல், மேம்பட்ட சரக்குப் போக்குவரத்து செயல்திறன், மக்களின் தடையற்ற போக்குவரத்து ஆகிய நோக்கங்களுடன் போக்குவரத்து இணைப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பிரதமரின் விரைவு சக்தி பெருந் திட்டத்தின் கீழ் மொத்தம் 49,983 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வே துறையில் புதிய ரயில் பாதை, பாதை (கேஜ்) மாற்றம், இரட்டை ரயில் பாதைத் திட்டங்களுக்கான சராசரி வருடாந்திர பட்ஜெட் ஒதுக்கீடு விவரம்:
2009-14 காலகட்டத்தில் சராசரி ஆண்டு ஒதுக்கீடு: ரூ. 11,527 கோடி
2024-25-ம் ஆண்டில் ஒதுக்கீடு ரூ. 68,634 கோடி
இது கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகமாகும்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
PLM/DL
(Release ID: 2037884)
Visitor Counter : 64