அணுசக்தி அமைச்சகம்
2031-32-ம் ஆண்டில் இந்தியாவின் நிறுவப்பட்ட அணுமின் திறன் மூன்று மடங்கு உயரும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
25 JUL 2024 5:36PM by PIB Chennai
2031-32-ம் ஆண்டில் இந்தியாவின் நிறுவப்பட்ட அணுமின் திறன் மூன்று மடங்காக உயரும். 2047-ம் ஆண்டில் 1 லட்சம் மெகாவாட் அணுசக்தி திறன் இருக்க வேண்டும் என பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் அணுமின் திறன் 70 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2013-14-ம் ஆண்டில் 4,780 மெகாவாட்டிலிருந்து தற்போது 8,180 மெகாவாட்டாக அணுசக்தித் திறன் அதிகரித்துள்ளது. அணுமின் நிலையங்களின் வருடாந்திர மின்சார உற்பத்தி 2013-14-ம் ஆண்டில் 34,228 மில்லியன் யூனிட்டுகளில் இருந்து 2023-24-ம் ஆண்டில் 47,971 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
நாட்டில் தற்போது 24 உலைகளில், 8,180 மெகாவாட் அணுமின் உற்பத்தித் திறன் நிறுவப்பட்டுள்ளது. தற்போது 15, 300 மெகாவாட் திறன் கொண்ட 21 அணு உலைகள் இந்திய அணுமின் கழகத்தால் (NPCIL) பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 7300 மெகாவாட் கொள்ளளவு கொண்ட ஒன்பது உலைகள், பாரதிய நாபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் எனப்படும் பவினி மூலம் கட்டுமானத்தில் உள்ளன. 8000 மெகாவாட் திறன் கொண்ட பன்னிரண்டு உலைகள் தொடர்பான திட்டம் தொடக்கத்துக்கு முந்தைய நடவடிக்கைகளில் உள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அணுசக்தித் துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் இந்தத் தகவலை தெரிவித்தார்.
----
PLM/DL
(Release ID: 2037767)
Visitor Counter : 68