அணுசக்தி அமைச்சகம்
கர்நாடகாவின் மாண்டியா, யாத்கிரி மாவட்டங்களில் லித்தியம் வளங்கள் உள்ளதாக அணுக் கனிம ஆய்வு, ஆராய்ச்சி இயக்குநரகம் கண்டறிந்துள்ளது
Posted On:
25 JUL 2024 5:38PM by PIB Chennai
கர்நாடகாவின் மாண்டியா, யாத்கிரி மாவட்டங்களில் லித்தியம் வளங்கள் இருப்பதை அணுசக்தித் துறையின் ஒரு அமைப்பான அணு கனிம ஆய்வு, ஆராய்ச்சிக்கான இயக்குநரகம் (ஏஎம்டி) கண்டறிந்துள்ளது. மேலும், கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தில் லித்தியம் வளங்களை அடையாளம் காணவும், மதிப்பிடவும் ஆரம்ப கட்ட ஆய்வுகளும் வரையறுக்கப்பட்ட நில ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மார்லகல்லா பகுதியில் 1,600 டன் (ஜி3 நிலை) லித்தியம் வளங்களை ஏஎம்டி நிறுவியுள்ளது.
தற்போது சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தின் சில பகுதிகளில் லித்தியத்திற்கான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ராஜஸ்தான், பீகார், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் நாட்டில் லித்தியம் வளங்களுக்கான புவியியல் மையங்களாக உள்ளன.
அணு கனிம ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான இயக்குநரகம் (ஏஎம்டி) சமீபத்தில் நடத்திய பூர்வாங்க ஆய்வில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தின் மசன்பால் பகுதியில் மேற்பரப்பு யுரேனியம் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் அணுமின் நிலையம் அமைப்பது குறித்து அணுசக்தி கமிஷன் எந்த ஆய்வும் நடத்தவில்லை.
இந்திய அரசும், ரஷ்ய அரசும் அணுசக்தியை அமைதி நோக்கங்களுக்காக பயன்படுத்துவதில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அணுசக்தித் துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
----
PLM/DL
(Release ID: 2037765)
Visitor Counter : 55