நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரிக்கு மாற்று எரிபொருளை கண்டறிவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
Posted On:
24 JUL 2024 4:43PM by PIB Chennai
அனல் மின்நிலையங்களுக்கு (டிபிபி) எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் 5 சதவீதம் முதல் 10 சதவீத உயிரி எரிபொருளை நிலக்கரியுடன் சேர்த்து பயன்படுத்த முடியும் என்பது ஆராய்ச்சிகளுக்கு பிறகு தெரியவந்துள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அவர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தை (RE-RTD)" பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை மூலம் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பரவலான பயன்பாடுகளுக்காக பயனுள்ள மற்றும் செலவு குறைந்த முறையில் செயல்படுத்தி வருகிறது என்றார். இது அரசு மற்றும் இலாப நோக்கமற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு 100 சதவீதம் வரையிலும், தொழில்துறை, தொடக்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் உற்பத்தி பிரிவுகளுக்கு 70 விழுக்காடு வரையிலும் நிதியுதவியை வழங்குகிறது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எரிசக்திக்காக நிலக்கரியை பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதகமான விளைவுகளை சரிசெய்ய நிலக்கரி நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அம்சங்களைக் கொண்ட நவீன இயந்திரங்களை பயன்படுத்துகின்றன. சுரங்கத்தில் வெடிப்புகளை குறைத்து அதிக சுமைகளை அகற்றுவதற்கான ரிப்பர் வாகனங்கள், நிலத்தடியில் உள்ள சுரங்கங்களை தொடர்ச்சியாக பயன்படுத்துதல், வெடி வைத்து சுரங்கங்களை தகர்க்கும் போது பக்கவாட்டு பகுதிகள் சரியாமல் இருக்க வலுவான சுவர் அமைத்தல், நிலக்கரியை கொண்டு செல்ல நவீன போக்குவரத்து ஏற்பாடுகள். சாலைமார்க்கமாக கொண்டு செல்வதை கணிசமாக குறைத்தல், நிலக்கரியை குவித்தவைத்துள்ள இடத்தில் தூசி பரவாமல் இருக்க தண்ணீர் தெளிப்பான்கள், சுரங்கத்திற்காக குத்தகைக்கு எடுத்துள்ள இடங்களில் செடிகளை நடுதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் இதில் அடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
-----
VK/DL
(Release ID: 2037719)