எஃகுத்துறை அமைச்சகம்
உயர்தர எஃகு தயாரிப்புக்கு ஊக்கத்தொகை
இடுகை இடப்பட்ட நாள்:
26 JUL 2024 2:57PM by PIB Chennai
உள்நாட்டிலேயே உயர்தர எஃகு தயாரிப்பை ஊக்குவித்து, மூலதன முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம், இறக்குமதியை குறைப்பதற்காக, உயர்தர எஃகு தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக, மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் திரு எச்.டி குமாரசாமி மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்குவதுடன், உயர்தர எஃகு உற்பத்தித் துறையில் ரூ.29,500 கோடி கூடுதல் முதலீடு தேவை என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் சுமார் 25 மில்லியன் டன் அளவிற்கு கூடுதலாக உயர்தர எஃகு உற்பத்தித் திறன் உருவாக்கப்படும் என்றும் திரு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2037429
***
MM/RS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2037708)
வருகையாளர் எண்ணிக்கை : 65