எஃகுத்துறை அமைச்சகம்
'எஃகு இறக்குமதி கண்காணிப்பு அமைப்பு' 2.0 இணையதளம் அறிமுகம்
Posted On:
25 JUL 2024 5:09PM by PIB Chennai
மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் அமைச்சர் திரு எச்.டி.குமாரசாமி, துறையின் இணையமைச்சர் திரு பூபதி ராஜூ சீனிவாச வர்மா மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் மேம்படுத்தப்பட்ட எஃகு இறக்குமதி கண்காணிப்பு அமைப்பான சிம்ஸ் 2.0-ஐ தொடங்கி வைத்தார்.
2019-இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிம்ஸ், உள்நாட்டு தொழில்துறைக்கு விரிவான எஃகு இறக்குமதி தரவை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
இந்த இணையதளம் ஒரு வலுவான தரவு நுழைவு அமைப்பைக் கொண்டுள்ளது, நிலையான மற்றும் உண்மையான தரவை உறுதி செய்வதோடு, இது வெளிப்படைத்தன்மையுடன் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கிறது.
எஃகு அமைச்சகத்தின் கீழ் உள்ள சிபிஎஸ்இயான டிஜிஎஃப்டி,, பிஐஎஸ், மற்றும் எம்எஸ்டிசி நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் சிம்ஸ் 2.0-ன் வளர்ச்சி ஒரு கூட்டு முயற்சியாகும்.
மத்திய எஃகுத் துறை அமைச்சர் திரு எச்.டி.குமாரசாமி பேசுகையில், சிம்ஸ் 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய சாதனை என்று வலியுறுத்தினார். இது இந்திய அரசின் 100 நாள் செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது என்றார் அமைச்சர்.
இரும்பு மற்றும் எஃகுத் துறையில் பயன்படுத்தப்படும் 16 வெவ்வேறு செயல்முறைகளுக்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய "இரும்பு மற்றும் எஃகு துறைக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்" புத்தகத்தின் இரண்டாவது தொகுதியையும் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் அமைச்சர் திரு எச்.டி.குமாரசாமி வெளியிட்டார்.
இந்த வழிகாட்டுதல்கள் இரும்பு மற்றும் எஃகு தொழிலுக்கென பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், பாதுகாப்புத் தரங்களை ஏற்றுக்கொள்வதிலும் விபத்துக்களை ஒழிப்பதிலும் தொழில்துறை உலகத் தரம் வாய்ந்ததாக மாற உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.
********
LKS/KR/DL
(Release ID: 2037701)
Visitor Counter : 30