எரிசக்தி அமைச்சகம்
அனல் மின் உற்பத்தி விரிவாக்கம்
प्रविष्टि तिथि:
25 JUL 2024 5:09PM by PIB Chennai
2031-32-ம் ஆண்டிற்குள் மதிப்பிடப்பட்ட மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மத்திய மின்சார ஆணையத்தால் மின் உற்பத்தி திட்டமிடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளின்படி, 2032-ம் ஆண்டில் நாட்டின் அடிப்படை சுமை தேவையை பூர்த்தி செய்ய, தேவையான நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி அடிப்படையிலான நிறுவப்பட்ட திறன் தற்போதைய நிறுவப்பட்ட திறன் 217.5 ஜிகாவாட்டுக்கு எதிராக 283 ஜிகாவாட் ஆக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு, 2031-32-ம் ஆண்டுக்குள் கூடுதலாக குறைந்தபட்சம் 80 ஜிகாவாட் நிலக்கரி அடிப்படையிலான திறனை அமைக்க அரசு முன்மொழிகிறது.
தேசிய மின்சாரத் திட்டத்தில் உள்ளபடி புதிய நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் திறனை அமைப்பதற்கான மதிப்பிடப்பட்ட மூலதன செலவு ரூ.8.34 கோடி / மெகாவாட் ஆகும். (2021-22 விலை மட்டத்தில்). எனவே, கூடுதலாக அனல் மின் உற்பத்தி செய்ய 2031-32-க்குள் குறைந்தபட்சம் ரூ.6,67,200 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, புதைபடிவம் அல்லாத எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், அனல் மின் நிலையங்களின் கழிவு வெளியேற்ற அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது:
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
****
LKS/KR/DL
(रिलीज़ आईडी: 2037696)
आगंतुक पटल : 52