உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவுப் பதப்படுத்துதல் துறையில் புதிய முன்முயற்சிகள்

Posted On: 25 JUL 2024 4:56PM by PIB Chennai

மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி போன்றவற்றில் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் பங்களிப்பு இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளது. இத்துறையில் 41 மெகா உணவுப் பூங்காக்கள், 399 குளிர்பதன சங்கிலித் திட்டங்கள், 7 வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகள், 588 உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு மத்திய உணவுப்பதன தொழில்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உணவு பதப்படுத்தும் தொழில்களில் வேலைவாய்ப்பு 2014-15-ம் ஆண்டில் 17.73 லட்சத்திலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் 20.68 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், வேளாண்-உணவு ஏற்றுமதியில் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதியின் சதவீதப் பங்கு 2014-15 ஆம் ஆண்டில் 13.7% ஆக இருந்தது, 2023-24 ஆம் ஆண்டில் 23.4% ஆக உயர்ந்துள்ளது.

உணவு பதப்படுத்தும் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யவும், பல்வேறு சவால்களை சமாளிக்கவும், உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் மத்திய அரசின் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பிரதமரின் உணவு பதப்படுத்தும் தொழில் திட்டத்தின் கீழ் குறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களை அமைப்பதற்கான நிதி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ஆதரவும் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 2020-21 முதல் 2024-25 வரை ஐந்து ஆண்டு காலத்திற்கு ரூ.10,000 கோடி மொத்த ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். ஜூன் 30, 2024 நிலவரப்படி மொத்தம் 92,549 குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு பிரதமரின் திட்டத்தின் கீழ் உதவி பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

----

LKS/KPG/DL


(Release ID: 2037693) Visitor Counter : 67


Read this release in: Telugu , English , Urdu , Hindi