எரிசக்தி அமைச்சகம்
அனல் மின்சார உற்பத்தி மற்றும் கரியமில வாயு உமிழ்வு
Posted On:
25 JUL 2024 4:59PM by PIB Chennai
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் அனல் மின்சார உற்பத்தி மற்றும் கரியமில வாயு உமிழ்வு பற்றிய தரவு தொடர்பான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:
ஆண்டு
|
நிலக்கரியில் இருந்து மின்சாரம் உற்பத்தி (பில்லியன் யூனிட்டுகளில்)
|
கரியமில வாயு உமிழ்வு (மில்லியன் மெட்ரிக் டன்களில்)
|
2018-19
|
987.68
|
897.28
|
2019-20
|
988.72
|
897.28
|
2020-21
|
959.72
|
867.92
|
2021-22
|
951.88
|
853.82
|
2022-23
|
1043.83
|
943.04
|
இந்தியப் பொருளாதாரத்தின் விரைவான விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியுடன், மின்சாரத் தேவையும் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியாவில் மின்சாரத் தேவை 2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளில் சுமார் 9% வளர்ச்சியைக் கண்டுள்ளது. மின் உற்பத்தி அதிகரிப்புக்கு ஏற்ப மொத்த மாசு வெளியேற்றமும் அதிகரித்துள்ளது.
எனினும், மின் கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு அதிகரித்து வருவதால், மின் கட்டமைப்பின் கரியமில வாயுவின் செறிவு குறைந்துள்ளது. 2013-14 முதல் 2022-23 வரை இந்தியாவில் தொகுப்பு மின்சாரத்தின் சராசரி கார்பன் உமிழ்வு காரணியில் சுமார் 9% குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது.
அனல் மின் நிலையங்களின் கரியமில வாயு வெளியேற்ற அளவைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது:
2030-ம் ஆண்டுக்குள் புதைபடிவம் அல்லாத எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தி வளங்களிலிருந்து சுமார் 50 சதவீத ஒட்டுமொத்த மின்சார நிறுவப்பட்ட திறனை அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
LKS/KPG/DL
(Release ID: 2037692)
Visitor Counter : 28