எரிசக்தி அமைச்சகம்
தீன் தயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜனா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்
Posted On:
25 JUL 2024 5:01PM by PIB Chennai
தீன் தயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜனா திட்டத்தை மத்திய அரசு கிராமப்புறங்களுக்காக 2014 டிசம்பரில் பின்வரும் அம்சங்களுடன் தொடங்கியது:
(i) விவசாயிகளுக்கு பகல்நேர மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் வேளாண் மின்னூட்டிகளை தரம் பிரித்தல்;
(ii) ஊரகப் பகுதிகளில் மின் பங்கீடுகள், மின் மாற்றிகள், மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மீட்டர் பொருத்துதல் உள்ளிட்ட மின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்;
(iii) கிராம மற்றும் வீடுகளுக்கு மின்மயமாக்கல் பணிகள்.
இவற்றின் அடிப்படையில், இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் செப்டம்பர் 2016 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து கட்டுமானப் பணிகளும் 31.12.2020-க்குள் முடிக்கப்பட்டு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட பணிகளின் விவரங்கள்
வ.
எண்
|
திட்டத்தின் பெயர்
|
அலகு
|
இலக்கு
|
நிறைவேற்றம்
|
1
|
33/11 கிலோ வோல்ட் புதிய துணைமின் நிலையங்கள்
|
எண்கள்
|
108
|
106
|
2
|
33/11 கிலோ வோல்ட் புதிய துணைமின் நிலையங்களின் விரிவாக்கம்
|
எண்கள்
|
119
|
128
|
3
|
மேற்குறிப்பிட்ட துணை மின் நிலையங்களின் விவரம்
|
|
|
|
|
- 33 கிலோ வோல்ட் லைன்கள்
|
கிமீ
|
1,478
|
1,514
|
|
- 11 கிலோ வோல்ட் லைன்
|
கிமீ
|
1,513
|
1,345
|
4
|
ஃபீடர் பிரிப்பு
|
எண்கள்
|
29
|
29
|
|
11 கிலோ வோல்ட் லைன் நிறுவுதல்
|
கிமீ
|
713
|
669
|
|
எல்டி லைன் நிறுவுதல்
|
கிமீ
|
261
|
242
|
|
டிடி நிறுவுதல்
|
எண்கள்
|
974
|
895
|
5
|
மின்சார மீட்டர் – பயன்படுத்துவோர்
|
எண்கள்
|
11,93,990
|
11,95,856
|
|
ஒருமுனை மீட்டர்கள்
|
எண்கள்.
|
10,16,794
|
10,44,121
|
|
மும்முனை மீட்டர்கள்
|
எண்கள்
|
1,77,196
|
1,51,735
|
6
|
வீட்டுக்கான இணைப்புகள்
|
|
|
|
|
- பிபிஎல் வீடுகள்
|
எண்கள்
|
897
|
897
|
|
- ஏபிஎல் வீடுகள்
|
எண்கள்
|
6,171
|
6,679
|
|
- டிடி-கள்
|
எண்கள்
|
283
|
294
|
|
- 11 கிலோ வோல்ட்
|
கிமீ
|
284
|
201
|
|
- எல்டி லைன் நிறுவுதல்
|
கிமீ
|
931
|
966
|
மாவட்ட நகர்ப்புற திட்டப்பணிகளை சீராக செயல்படுத்த கீழ்க்கண்டவாறு நிறுவன அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
(i) மாநில அளவில், பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு.
(ii) மத்திய அளவில், மத்திய அரசின் செயலர் (மின்சாரம்) தலைமையின் கீழ், அமைச்சகங்களுக்கு இடையேயான கண்காணிப்புக் குழு, இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும், திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் அமைக்கப்படும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
SMB/AG/KR/DL
(Release ID: 2037642)
Visitor Counter : 49