ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் துறை, கட்டாய இந்திய தர நிர்ணய முறையை அமல்படுத்தி வருகிறது

Posted On: 26 JUL 2024 2:53PM by PIB Chennai

ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனப் பொருட்களுக்கான கட்டாய தர நிர்ணயத்தை ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் துறை அமல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கை இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ரசாயனங்கள் கடுமையான தர அளவுருக்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது, அபாயகரமான மற்றும் தரமற்ற தயாரிப்புகளின் பயன்பாட்டைத் தடுக்கிறது. இந்திய தர நிர்ணய அமைவனச் சட்டம், 2016 இன் பிரிவு 16 இன் கீழ் இந்த தரங்களை கட்டாயமாக்குவதன் மூலம், மனிதர்கள், விலங்கு, தாவர ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வது, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பது, தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைப்பு சட்டம் 2016-ன் கீழ் தர நிர்ணயத்தை கட்டாயமாக்க ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் துறை இதுவரை 72 தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை அறிவிக்கை செய்துள்ளது. 72 கியூசிஓ நிறுவனங்களில், 41 கியூசிஓ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன, மீதமுள்ள 31 கியூசிஓக்களின் செயலாக்க தேதி அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி, உற்பத்தி, விற்பனை, போக்குவரத்து, விநியோகம், பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் பூச்சிக்கொல்லிகள் சட்டம், 1968- அறிவிக்கை செய்துள்ளது.

தொழிற்சாலை செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் அபாயகரமான இரசாயனங்களை அடையாளம் காண நச்சுத்தன்மை, தீப்பற்றக்கூடிய தன்மை, வெடிக்கும் தன்மை போன்ற அபாய அளவுகோல்கள் வரையறுக்கப்பட்ட அபாயகரமான ரசாயனங்கள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்குமதி விதிகள் 1989 மற்றும் அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது.

உரத் துறையைப் பொறுத்தமட்டில், விவசாயிகளுக்குதரமான உரம் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, மத்திய அரசு உரங்களை இன்றியமையாத பொருளாக அறிவித்து, 1985ஆம் ஆண்டு உரக்கட்டுப்பாட்டு ஆணைகளை வெளியிட்டுள்ளது. உரக் கட்டுப்பாடு ஆணை உரங்களின் விநியோகம் மற்றும் தரத்தை ஒழுங்குபடுத்துகிறது. இந்த உத்தரவின் கீழ், பல்வேறு உரங்களின் விவரக்குறிப்பு அந்தந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் இல்லாத உரங்களின் விற்பனையை இது கண்டிப்பாக தடை செய்கிறது. எஃப்.சி. விதிமுறை மீறப்பட்டால், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் தண்டனை நடவடிக்கை மற்றும் எஃப் சி ஓ-வின் கீழ் நிர்வாக நடவடிக்கை ஆகிய இரண்டையும் செயல்படுத்த வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ரசாயனங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் உரங்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ஏற்ற இறக்கங்களைக் காட்டியுள்ளன. முக்கிய ரசாயனங்களின் மொத்த ஏற்றுமதி அளவு 2019-20 நிதியாண்டில் 16,98,384 மெட்ரிக் டன்களில் இருந்து FY2023-24 இல் 26,42,179 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது, FY2022-23 இல் 46,26,765 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. மறுபுறம், முக்கிய பெட்ரோகெமிக்கல்களின் மொத்த ஏற்றுமதி அளவு FY2019-20 இல் 87,98,230 மெட்ரிக் டன்னிலிருந்து FY2023-24 இல் 38,50,778 மெட்ரிக் டன்னாகக் குறைந்தது, FY2022-23 இல் 93,34,559 மெட்ரிக் டன்களுடன் ஏற்ற இறக்கங்களைக் காட்டுகிறது.

உரங்களைப் பொறுத்தவரை, ஏற்றுமதி 2019-20 ஆம் ஆண்டில் 303604 மெட்ரிக் டன்னிலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் 154682 மெட்ரிக் டன்னாக குறைந்தது, இது மீண்டும் 2022-23 ஆம் ஆண்டில் 186148 மெட்ரிக் டன்னாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 298762 மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

PKV/KV/DL



(Release ID: 2037640) Visitor Counter : 19