தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமாதான் இணையதள செயல்பாடுகள்

Posted On: 25 JUL 2024 3:57PM by PIB Chennai

தொழில் தகறாறுகள் சட்டம், 1947-ன் கீழ் தொழிலாளர்கள், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தொழில் தகறாறுகளை தாக்கல் செய்ய வசதியாக சமாதான் இணையதளம் தொடங்கப்பட்டது. பணிக்கொடை வழங்கல் சட்டம், 1972, குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948, ஊதியம் வழங்கல் சட்டம், 1936, சம ஊதியச் சட்டம், 1976  மகப்பேறு நலச் சட்டம், 1961 ஆகியவற்றின் கீழ் தொழிலாளர்கள் உரிமைகோரல் வழக்குகளை தாக்கல் செய்வதற்கான வசதிகளும் இதில் உள்ளன.

இந்த இணைய தளம் பயனாளிகளுக்கு எளிதான நடைமுறையைக் கொண்டுள்ளது, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியுள்ளது மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் குறை தீர்ப்பின் செயல்திறனை பின்வரும் வழிகளில் மேம்படுத்தியுள்ளது: -

இணையதளம் மூலம் தாக்கல் செய்தல்: தொழிலாளர்கள் / தொழிற்சங்கங்கள் / நிர்வாகத்தினர் கணினி, உமாங் செயலி மூலம் 24 மணி நேரமும் உள்நுழைந்தும் அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்குச் சென்றும் தங்களின் சர்ச்சைகள் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்யலாம்.

கண்காணிப்பு: தொழிலாளர்கள் தங்களின் சர்ச்சைகள் / உரிமைகோரல்களின் நிலையை போர்ட்டலிலேயே கண்காணிக்க முடியும்.

வெளிப்படைத்தன்மை: குறை தீர்க்கும் செயல்முறையின் போது வழங்கப்படும் அனைத்து அறிவிப்புகளும் பிற ஆவணங்களும் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஆன்லைனில் அனுப்பப்படுகின்றன.

விரைந்து தீர்வு காணுதல்: வழக்குகளை விரைந்து முடிக்க இணையதள நடைமுறை உதவியுள்ளது.

கண்காணிப்பு: உள் கண்காணிப்புக்கான கருவிகளை வழங்குவதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க இந்த போர்டல் உதவுகிறது.

ஆண்டு

மொத்த புகார்கள்*

( 30.06.2024 நிலவரப்படி)

 
 

பெறப்பட்டவை

தீர்க்கப்பட்டவை

 

2020

2110

492

 

2021

5446

4054

 

2022

10444

8050

 

2023

29223

19570

 

2024

15778

13491

 

மொத்தம்

63001

45657

 

 

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2036933)

SMB/AG/KR


(Release ID: 2037565) Visitor Counter : 60


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP