தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகள்
Posted On:
25 JUL 2024 4:00PM by PIB Chennai
தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டம், 1948, பருவகால தொழிற்சாலைகள் தவிர, பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட, ரூ.21,000/- (ஊனமுற்றோருக்கு ரூ.25,000/-) வரை ஊதியம் வழங்கும் அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனவே, இந்தச் சட்டம் அமைப்புசாரா துறைக்கு பொருந்தாது.
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் செயல்பாட்டை மேம்படுத்த தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
நிரந்தர இயலாமை நலன் / சார்ந்திருப்போரின் நன்மைகள் (DB) பயனாளிகளுக்கான சலுகை விகிதங்கள் அதிகரிப்பு, ஓய்வு பெறுவதற்கு முன்பே காப்பீடு இல்லாமல் போன ஓய்வு பெற்ற பயனாளிகளுக்கு மருத்துவ கவனிப்பை வழங்க புதிய திட்டத்திற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல், காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் விவரங்கள் மற்றும் அவர்களது குடும்ப விவரங்களை புதுப்பிப்பதற்கு/திருத்துவதற்கு இணையதள மென்பொருள் அறிமுகம், சமூகப் பாதுகாப்பு பயன்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக காப்பீட்டு நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அடிப்படையிலான சான்றுறுதி தன்னார்வ அடிப்படையில் பின்பற்றப்படுதல். காப்பீட்டு நபர்கள் / காப்பீட்டு பெண்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக, தொழிலாளர் ரொக்கப் பயன்கள் கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இணையதள வசதியோடு, கொவிட் காலத்தின் பங்களிப்பு நிபந்தனைகளில் தளர்வு ஆகியவை இதில் அடங்கும்
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
(Release ID: 2036938)
LKS/KPG/KR
(Release ID: 2037561)
Visitor Counter : 64