நிலக்கரி அமைச்சகம்

தாயின் பெயரில் ஒரு மரம் - தன்பாதில் மரக்கன்று நடும் திட்டம் 2024 தொடக்கம்

Posted On: 25 JUL 2024 4:34PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட "தாயின் பெயரில் ஒரு மரம்" என்ற தொலைநோக்கு இயக்கத்தின் ஒரு பகுதியாக தன்பாத்தில் உள்ள பாரத் கோக்கிங் கோல் நிறுவனத்தில் (25.07.2024) மரக்கன்று  நடும் திட்டம் 2024-ஐ மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

நிலக்கரி / பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலக்கரி உற்பத்தியை கணிசமாக அதிகரித்திருப்பதோடு, பல்வேறு முன்முயற்சிகள் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான உறுதிப்பாட்டையும் நிரூபித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், பொதுத்துறை நிறுவனங்கள் நிலக்கரி வயல்களிலும் அதைச் சுற்றியுள்ள 10,942 ஹெக்டேர் நிலத்திலும் 24 மில்லியன் மரக்கன்றுகளை நட்டுள்ளன. பொதுத்துறை நிலக்கரி நிறுவனங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளன.

பெரும் நிலப்பரப்பிலான தோட்டங்கள் மூலம், கார்பன் தொட்டியை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுவதோடு மேம்பட்ட சமூக வாழ்வுக்காக காற்று மற்றும் நீரின் தரமும் மேம்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் சுற்றுச்சூழல், மேலாண்மை, நிலையான வளர்ச்சிக்கான கூட்டு உறுதிப்பாட்டை உள்ளடக்கியது. நிலக்கரி நிறுவனங்கள் தொடர்ந்து மரங்களை நட்டு சுற்றுச்சூழலை வளர்ப்பதால், அவை இயற்கையுடன் நிலைத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் மரபை உருவாக்குகின்றன. பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் ஒத்துப்போகும் எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றன.

                                   ****

(Release ID: 2036963)

LKS/KPG/KR



(Release ID: 2037547) Visitor Counter : 8