புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"இந்தியாவில் ஊதிய அறிக்கை: ஒரு வேலைவாய்ப்பு முன்னோக்கு - மே, 2024" வெளியீடு

Posted On: 25 JUL 2024 6:20PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று பெரிய திட்டங்களின் கீழ் சந்தா செலுத்திய சந்தாதாரர்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தி, முறைசார் துறையில் செப்டம்பர் 2017 வரையிலான வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

2023-24 ஆம் ஆண்டில், புதிய ஊழியர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,93,119 ஆக இருந்தது.
2024 மே  மாதத்தில் புதிய சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 9,84,681 ஆகும், இது ஏப்ரல் மாதத்தில் 9,30,990 ஆக இருந்தது.


2023-24 ஆம் ஆண்டில், இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்தவர்கள், செலுத்தும் பங்களிப்பு 1,67,60,872 ஆகும்.
2024 மே மாதத்தில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்தவர்கள்  செலுத்தும் பங்களிப்பு 17,14,764 ஆகும், இது ஏப்ரல் மாதத்தில் 12,20,360 ஆக இருந்தது.


2023-24 ஆம் ஆண்டில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மொத்த புதிய பங்களிப்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 9,73,428 ஆகும்.
2024 மே மாதத்தில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பங்களிக்கும் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 79,080 ஆகும், இது ஏப்ரல்  மாதத்தில் 1,10,665 ஆக இருந்தது.


*****

PKV/KV/KR


(Release ID: 2037532) Visitor Counter : 47


Read this release in: Hindi , Hindi_MP , English , Urdu