குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையில் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம்
Posted On:
25 JUL 2024 5:05PM by PIB Chennai
நாட்டில் பழங்குடியின சமூகத்தினரின் வேலைவாய்ப்புக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பிஎம்ஜிஇபி):
குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகமானது காதி - கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) மூலம், விவசாயம் அல்லாத துறைகளில் புதிய நிறுவனங்களை அமைப்பதில் நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக பிஎம்ஜிஇபி திட்டத்தை செயல்படுத்துகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர். இது பாரம்பரிய கைவினைஞர்கள், கிராமப்புற, நகர்ப்புற வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023-24ம் நிதி ஆண்டில் 37,448 பழங்குடியினருக்கு இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது.
உத்யம் தளம்:
சிறு, குறு, தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நோக்கில் உத்யம் பதிவு தளத்தை அரசு தொடங்கியது. இதில் பழங்குடியினரின் 15,43,418 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 66,13,909 பழங்குடியினர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
-----
(Release ID: 2036994)
PLM/KR
(Release ID: 2037514)
Visitor Counter : 35