இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

சன்லாம் எமர்ஜிங் மார்க்கெட்ஸ் (மொரீஷியஸ்) லிமிடெட், ஸ்ரீராம் ஜி.ஐ ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 16.12% பங்குகளை வாங்க சி.சி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 24 JUL 2024 6:27PM by PIB Chennai

முன்மொழியப்பட்ட ஆணை, ஸ்ரீராம் ஜி.ஐ ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (எஸ்.ஜி.ஐ.ஹெச்) இல் 16.12% பங்குகளை சன்லாம் எமர்ஜிங் மார்க்கெட்ஸ் (மொரீஷியஸ்) லிமிடெட் (எஸ்.இ.எம்.எம்) அதன் தற்போதைய பங்குதாரர்களிடமிருந்து வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

எஸ்.ஜி.ஐ.ஹெச் என்பது ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-இன் விளம்பரதாரர் மற்றும் ஹோல்டிங் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் எஸ்.ஜி.ஐ.ஹெச்-ற்கு 66.64% பங்குகள் உள்ளன.

மொரீஷியஸில் இணைக்கப்பட்ட எஸ்.இ.எம்.எம், தென்னாப்பிரிக்காவின் சன்லாம் லிமிடெட்டின் 100% துணை நிறுவனமாகும். இது சன்லாம் குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

சி.சி.ஐ.யின் விரிவான ஆணை விரைவில் வெளியிடப்படும்

BR/KR

***


(Release ID: 2037496)
Read this release in: English , Marathi , Hindi , Hindi_MP