வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பிரதமரின் விரைவு சக்தியின் கீழ் கட்டமைப்பு திட்டமிடல் குழுவின் 76 வது கூட்டம் ஐந்து முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை மதிப்பீடு செய்தது

Posted On: 26 JUL 2024 1:56PM by PIB Chennai

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) கூடுதல் செயலாளர் திரு ராஜீவ் சிங் தாக்கூர் தலைமையில் பிரதமரின் விரைவு சக்தி தலைமையிலான கட்டமைப்பு திட்டமிடல் குழுவின் 76-வது கூட்டம் புதுதில்லியில் நேற்று கூடியது. ரயில்வே அமைச்சகம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவற்றின் திட்டங்கள் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த திட்டமிடலுக்கு ஏற்ற வகையில் மதிப்பீடு செய்யப்பட்டன.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்திய ரயில்வேயின் ஹவுரா-தில்லி பிரதான பாதையின் வாரணாசி-பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் பிரிவு, இரட்டை மின்மயமாக்கப்பட்ட பயணிகள் மற்றும் சரக்கு பாதை, மூன்றாவது மற்றும் நான்காவது வழித்தடங்களைச் சேர்ப்பதன் மூலம் விரிவாக்கப்பட உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மும்பை-ஹவுரா டிரங்க் பாதையின் கர்சியா-பர்மல்காசா பிரிவு புதிய 277.917 கிமீ இரட்டை பாதை மேம்பாட்டுத் திட்டம் கர்சியா சந்திப்பு (பிலாஸ்பூர்-ஜார்சுகுடா பிரிவு) முதல் பர்மல்காசா (துர்க்-நாக்பூர் பிரிவு) வரை திறனை விரிவுபடுத்தும்.

நாகாலாந்தில் தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை 202- ஒருவழிச் சாலையிலிருந்து இருவழிச் சாலையாக அகலப்படுத்துதல் திட்டம், ஐந்து முக்கிய மாவட்டங்களில் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 715--வை பஸ்னாகாட் முதல் பலுகான் வழியாக சம்ராங் வரை இருவழிப்பாதையாக மாற்றும் திட்டம், அசாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் உள்ள பஸ்னாகாட் முதல் சாம்ராங் அருகே உள்ள இந்திய-பூட்டான் எல்லை வரை மொத்தம் 91.48 கி.மீ. நீளத்திற்கு அமையும்.

தேசிய நெடுஞ்சாலை 102-ல் தற்போதுள்ள ஷாங்ஷாக் முதல் டெங்னோபால் வரையிலான சாலையை மணிப்பூர் மாநிலத்தில் 188.8 கி.மீ நீளம் கொண்ட இருவழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்படுத்த இந்த திட்டம் முன்மொழிந்தது. இந்த திட்டம் பிராந்தியத்தின் சமூக, பொருளாதார மற்றும் தளவாட தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037377

***

(Release ID: 2037377)

PKV/KV/KR



(Release ID: 2037438) Visitor Counter : 9


Read this release in: English , Hindi