ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்புமுறையான கவாச், 1465 வழித்தட கிலோமீட்டர் மற்றும் தென் மத்திய ரயில்வேயில் 144 என்ஜின்களில் பொருத்தப்பட்டுள்ளது

Posted On: 24 JUL 2024 7:08PM by PIB Chennai

கவாச் என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு (ஏ.டி.பி) அமைப்புமுறை  மற்றும் உயர் தொழில்நுட்ப அமைப்புமுறையாகும், இதற்கு மிக உயரிய  பாதுகாப்பு சான்றிதழ் தேவைப்படுகிறது.

 

லோகோ பைலட் பிரேக்குகளை பயன்படுத்தத் தவறினால், குறிப்பிட்ட வேக வரம்புகளுக்குள் ஓடும் ரயிலில் பிரேக்குகள் தானியங்கியாக இயங்குவதற்கு கவாச் உதவுகிறது. மேலும் மோசமான வானிலையில் ரயில் பாதுகாப்பாக  இயங்க இது உதவுகிறது. கவாச் மற்ற நாடுகளால் தத்தெடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

கவாச்சை செயல்படுத்துவது, பல நடவடிக்கைகளை செயல்படுத்துவதை உள்ளடக்கியது, அவை:

* ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் கவாச் நிலையத்தை நிறுவுதல்.

* தடத்தின் நீளம் முழுவதும் ஆர்.எஃப்.ஐ.டி குறிச்சொற்களை  பொறித்தல் .

* பிரிவு முழுவதும் தொலைத் தொடர்பு கோபுரங்களை நிறுவுதல்.

* தண்டவாளத்தில் கண்ணாடி இழை கேபிள்களை பதித்தல்.

* இந்திய ரயில்வேயில் இயங்கும் ஒவ்வொரு ரயில் என்ஜினிலும் லோகோ கவாச் வசதியை செய்தல்.

இதுவரை 11465 வழித்தட கிலோமீட்டர் மற்றும் தென் மத்திய ரயில்வேயில் 144 என்ஜின்களில் கவாச் பொருத்தப்பட்டுள்ளன.

 

கவாச் பணிகளுக்கு  இதுவரை ரூ. 1216.77 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் ரூ. 1112.57 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

 

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

BR/KR

***


(Release ID: 2037435) Visitor Counter : 54


Read this release in: English , Hindi , Telugu , Kannada