நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2024 4:42PM by PIB Chennai
நிலக்கரி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.18.00 கோடியை ஒதுக்கீடு செய்தது. மேலும், 2024-25 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ.21.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தவிர, கோல் இந்தியா நிறுவனம் மற்றும் நிலக்கரித் துறையில் உள்ள இதர மத்திய பொதுத் துறை நிறுவனங்களும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக கணிசமான செலவினங்களை செய்து வருகின்றன.
இது தொடர்பாக அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது:
* ராஞ்சியில் "நிலக்கரி மற்றும் எரிசக்தி துறைக்கான தேசிய மையம்" அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக கீழ்க்கண்ட முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன:
· உற்பத்தி, உற்பத்தித்திறன், பாதுகாப்பு மற்றும் ஆய்வு.
· சுற்றுச்சூழல், சூழலியல், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை.
· நிலக்கரி சுரங்க கழிவுகளிலிருந்து செல்வம்.
· தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பங்கள் மற்றும் நிலக்கரி சுத்திகரிப்பு.
· நிலக்கரியின் மாற்று பயன்பாடு.
· புதுப்பிக்கத்தக்க எரிசக்தி.
நாட்டின் எரிசக்தி மற்றும் வேதியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பொருளாதார சுதந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை வளர்ப்பதற்கும் ஒரு முக்கியமான இயற்கை வளத்தைப் பயன்படுத்துவதற்காக 2024-25 ஆம் ஆண்டில் 'நிலக்கரி வாயுமயமாக்கல் குறித்த ஹேக்கத்தான்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி துறையில் "மேக் இன் இந்தியா" முன்முயற்சியை ஊக்குவிப்பதற்காக விரிவான விளம்பரம் மற்றும் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி துறையில் புதிய தொழில்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக "ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த ஹேக்கத்தான்கள்" ஏற்பாடு செய்யப்படுகின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
BR/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2037431)
வருகையாளர் எண்ணிக்கை : 82