சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்கக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துதல்
Posted On:
24 JUL 2024 4:46PM by PIB Chennai
சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சுரங்கக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, கனிமவள பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதிகள் (எம்.சி.டி.ஆர்), 2017இன் கீழ் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் கீழ், சுரங்க குத்தகையின் கனிமமயமாக்கப்படாத பகுதியில் கழிவுப் பொருட்களை பயனுள்ள கனிமங்களுடன் கலப்பதைத் தவிர்ப்பதற்காகவும், நிலத்தடி நீர் மோசமடைவதைத் தவிர்ப்பதற்காகவும் சுரங்கத் தொழிலாளர்கள் கழிவுப்பொருட்களை சேமிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
எம்.எம்.டி.ஆர் சட்டம், 1957, எம்.எம்.டி.ஆர் திருத்தச் சட்டம், 2021 மூலம் 28.03.2021 முதல் திருத்தப்பட்டது, இதன் மூலம் கனிம சலுகைகளை மாற்றுவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால், சுரங்கங்களை குத்தகைக்கு விடுதல் மற்றும் மாற்றுவதற்கான செயல்முறை நெறிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சட்டத்தின்படி, காற்று மற்றும் ஒலி மாசுபாடுக்கு எதிரான முன்னெச்சரிக்கை, நச்சு திரவ வெளியேற்றத்தைத் தடுத்தல், மேற்பரப்பு சரிவதைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றுக்கு வகை செய்யும் கனிம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதிகள் 2017-இன் அத்தியாயம்-5-ன்படி, அனைத்து சுரங்க குத்தகைதாரர்களும் நீடித்த சுரங்க நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மேலும், எம்.சி.டி.ஆர், 2017 விதி 35 (4)-இன்படி, சுரங்க குத்தகை உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் சுரங்க நடவடிக்கைகள் தொடங்கிய நாளிலிருந்து நான்கு வருட காலத்திற்குள் குறைந்தபட்சம் மூன்று நட்சத்திர மதிப்பீட்டை அடைய வேண்டும், அதன் பின்னர் அதை ஆண்டு அடிப்படையில் பராமரிக்க வேண்டும்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
BR/KR
***
(Release ID: 2037414)
Visitor Counter : 81