வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
Posted On:
25 JUL 2024 5:43PM by PIB Chennai
நகர்ப்புற வறுமை ஒழிப்பு உள்ளிட்ட நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டியவை மாநில அரசுகள். இதன்கீழ், திட்டங்களை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடம் உள்ளன. இதற்காக தீனதயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நிதியுதவியை வழங்கி கூடுதல் முயற்சிகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மேற்கொள்கிறது.
நகர்ப்புற ஏழை மக்கள் மத்தியில் வலுவான அடிமட்ட அளவிலான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம், நீடித்த அடிப்படையில் அவர்களுக்கு வாழ்வாதார வசதிகளை மேம்படுத்தி, திறன் வேலைவாய்ப்புகளையும், சுய வேலைவாய்ப்புகளையும் கிடைக்கச் செய்து நகர்ப்புற ஏழை மக்களின் நிலையை மேம்படுத்துவதுடன், வறுமையை ஒழிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். நகர்ப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு அடிப்படை சேவைகளுடன் கூடிய தங்குமிடங்களை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இதற்கும் மேலாக, நகர்ப்புற தெரு வியாபாரிகளுக்கு உரிய இடங்கள், கடன்,, சமூக பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கி அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதும் திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
இந்தத் திட்டத்தின் பலன்கள், சரியான முறையில் சென்றடைவதை கண்காணிப்பதற்காக மத்திய அளவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் தலைமையில் ஆட்சிமன்றக் குழுவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் தலைமையில் செயற்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலும் ஆட்சிமன்றக் குழு, செயற்குழு ஆகியவை மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. நகராட்சி ஆணையர் தலைமையிலான செயற்குழு மூலம் இந்தத் திட்டம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், திட்டம் சரியான முறையில் செயல்படுவதற்காக மாநிலங்கள்/நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் வழக்கமான கருத்தரங்குகள், மாநாடுகள், பணிமனைகள் ஆகியவற்றை அமைச்சகம் நடத்துகிறது. இதற்கும் மேலாக இந்த இயக்கத்தின்கீழ் விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தத் தகவல்களை மக்களவையில் இன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு.டோக்கன் சாகு எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
SK/KR
***
(Release ID: 2037308)
Visitor Counter : 70