எஃகுத்துறை அமைச்சகம்
2023-24-ம் ஆண்டுக்கான ஆட்சி மொழி கௌரவ விருது விசாகப்பட்டினத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது
प्रविष्टि तिथि:
25 JUL 2024 5:18PM by PIB Chennai
விசாகப்பட்டினத்தில் உள்ள நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
விசாகப்பட்டினம் நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுத் தலைவர் திரு அதுல் பட், 2023-24 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ஆட்சி மொழி கௌரவ விருதினை விசாகப்பட்டினத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அதுல் பட், மத்திய உள்துறை அமைச்சகத்தால் 2022-23 ஆம் ஆண்டிற்கான பிராந்திய ஆட்சி மொழி விருதைப் பெற்றதற்காக டோலிக் நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் இந்திமொழியை சிறப்பாக பயன்படுத்துவதில் அனைத்து அமைப்புகளின் ஆதரவையும் அவர் பாராட்டினார்.
உள்துறை அமைச்சகத்தின் இந்தி கற்பித்தல் திட்ட உதவி இயக்குநர் டாக்டர் ரீட்டா திரிவேதி விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தி பயிற்சி வசதிகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் பேசிய என்டிபிசி சிம்ஹாத்ரியின் திட்டத் தலைவர் திரு சஞ்சய் குமார் சின்ஹா, பொதுத்துறை நிறுவனங்களிடையே இந்தியைப் பரப்புவதில் திரு அதுல் பட்டின் தலைமையைப் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037025
***
SMB/RS/DL
(रिलीज़ आईडी: 2037202)
आगंतुक पटल : 66